இன்றைய தியானம்(Tamil) 24-02-2022 (God’s creation’s special)
இன்றைய தியானம்(Tamil) 24-02-2022 (God’s creation’s special)
வானத்து “பூ”
“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” – தானியேல் 12:3
கடற்கரை மணலை எண்ணக் கூடுமா, தலையில் உள்ள முடியை எண்ண முடியுமா அல்லது வானத்து நட்சத்திரங்களைத்தான் எண்ணி சரியாக சொல்ல முடியுமா? முடியாது அல்லவா! விஞ்ஞானிகளுக்கும் விசித்திரமான நட்சத்திரமாகிய நான் உங்களுடன் இன்று பேச விரும்புகிறேன். உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பாக சர்வ வல்ல தேவனால் நான் படைக்கப்பட்டேன். என்னை படைத்தவர் என்னை பார்த்து நல்லது என்று கண்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னிடம் என்ன விசேஷம் உள்ளது என்னை பார்த்து நல்லது என்று சொல்லுகிறாரே?
என்னில் என்ன விசேஷம் உள்ளது என்று என்னை ஆராய்ந்து பார்த்தேன். பேரொளி வீசக்கூடிய அருமையான வெளிச்சம் எனக்குள் இருப்பதை கண்டேன். அந்த வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருந்தது. அது மாத்திரமா என்னுடைய வெளிச்சம் பூமியிலுள்ள உங்கள் மேலும் பிரகாசித்தது. ஆண்டவர் வேதாகமத்தில் என்னைப் பற்றி அநேக இடங்களில் குறிப்பிட்டுள்ளதை கண்டு சந்தோஷப்படுகிறேன். தமது ஊழியர்களை நட்சத்திரங்களுக்கு ஒப்பிட்டு வேதாகமம் பேசுகின்றது. ஆத்தும ஆதாயம் செய்கிறவர்கள் என்னைப் போன்று பரலோகத்தில் நித்திய நித்தியமாய் பிரகாசிப்பார்கள் என்று வேதாகமம் கூறுகின்றது. இதைப் போல இன்னும் நிறைய சொல்லலாம். வேதாகமத்தை நன்கு தியானிப்பீர்களென்றால் என்னுடைய மகிமையை நீங்கள் அதிகமாக அறிய முடியும்.
“If you” என்ற ஆங்கிலக் கவிதையில் அதன் ஆசிரியர் சொல்லுகிறதை வாசிப்போம். “ஒரு இரவில் தேவனால் தரிசனம் ஒன்றை கண்டேன். என் தலையின் மேல் கிரீடமும் அதில் நிறைய நட்சத்திரங்களும் இருந்தது. மேலும் பரலோகத்தில் ஒரு நதியோரத்தில் நான் அமர்ந்திருந்தேன். அப்பொழுது என் பின்பாக ஒருவர் வந்து எனக்கு நன்றி சொன்னார். நீங்கள் யாரென்று அவரிடம் விசாரித்தேன். என்னை உங்களுக்கு ஞாபகம் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று நான் பரலோகத்தில் இருப்பதற்கு எனக்கு நீங்கள் கூறிய சுவிசேஷமே நான் இரட்சிக்கப்படவும் பரலோகம் வருவதற்கும் காரணமாக இருந்தது. உங்களுக்கு என் நன்றிகள் என்றார். தொடர்ந்து இதை போன்று அநேகர் என்னிடம் வந்து நன்றி சொன்னார்கள். அப்பொழுதுதான் நான் ஒன்றை புரிந்து கொண்டேன். “இயேசுவுக்காக பூமியில் நான் செய்த ஆத்தும ஆதாயம் பரலோகத்தில் அது எனக்கு பலனாக கிரீடத்தில் காணப்படும் நட்சத்திரங்களைப் போன்று காணப்படுகின்றது” இது “If you” என்ற ஆங்கிலக் கவிதையின் ஒரு பகுதிதான்.
உலகமும் உலகத்திலுள்ளவைகளும் அழிந்து போகும். நட்சத்திரமாகிய நான் என்றென்றைக்கும் பரலோகத்தில் இதை வாசிக்கின்ற உங்களோடு கூட இருப்பேன். நீங்கள் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக இருந்தால் என்னை பெற்றுக் கொள்வீர்கள். ஆண்டவர் உங்களை வழிநடத்துவாராக.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
சங்கிலித்தொடர் ஊழியம் செய்ய அர்ப்பணிக்கப்பட்ட தன்னார்வ ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250